வியாழன், 15 மே, 2014

மதுஓவிய மாதுமலர்கள்


அழகின் தளும்பல்களில்
ஆசைச் சுனை அவள்

என்னைக் களவு கொள்ள
கனவு பூத்த பேரழகி

பார்க்கிறாள்..பரிதவித்து போகிறேன்
சிரிக்கிறாள்...சிதைந்து போகிறேன்

மகரந்தகுழல் நீட்டி
மணம் தொடுகிறாள்...கனிந்து போகிறேன்

அவளின் அடுக்கடுக்கான அழகில்
அங்கமெங்கும் தன்னியல்பு விட்டுக் குழைய

சிலம்புச் சலங்கைகட்டி ஆடுகிறாள்
சிந்தையெங்கும் சிதறுகிறது ..என் மன மாணிக்கப்பரல்கள்

அவள் வதன அழகு தேடி
என் முகம் நான் புதைக்க...இவள்
அதிமென்மையவளோ
அதிநுண்மையவளோ

வண்ணத்தாவணி முந்தானை விரித்து
என்வாசம் வசம் செய்யதவளோ

உல்லாச தென்றல் விரித்து
உயிராடும்பிரியம் கூட்டி
ஊண் அமுதம் உருகச் செய்து

நித்தில  ஒளிவீசி.....

நித்தம் என் கனவு ஆடும் பேரழகியலே

நீ என்ன
என்னில் துளி வாங்கி
தூளியாடி.....

என்னைகளவு கொண்டு
கட்டில் தொட்டிலாடும்...கார்முகில் தாய்மையோடி

என் நேசச் சூலழகி....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கவிதை - " சுந்தரி கதிர்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக